Tuesday, May 23, 2023

தொழிலாளர் திரைப்பட விழா, சென்னை

தொழிலாளர் திரைப்பட விழா

28.5.2023 / ஞாயிறு / காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன அலுவலகம்,
சிங்கப்பூர் பிளாசா, மூன்றாவது மாடி, 164, லிங்கிச் செட்டி தெரு,
சென்னை

விழா வடிவமைப்பு : அமுதன் ஆர்.பி.
விழா ஒருங்கிணைப்பு : மறுபக்கம் & பாட்டாளி படிப்பு வட்டம் 



காலை 11. 00 மணி : தொடக்க விழா 

சிறப்பு விருந்தினர்கள் :

சி.எச்.வெங்கிடாச்சலம், AIBEA 
மருத்துவர் சாந்தி

காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை : முதல் அமர்வு

Glass (இயக்குநர்: பெர்ட் ஹான்ஸ்ட்ரா; 10.30 நிமிடங்கள்; வசனம் இல்லை; 1958

ஒரு சூடான கண்ணாடிக்கும், ஒரு கைவினைஞரின் துல்லிய நேரத்திற்கும் இடையிலான ஒத்திசைவைச் சொல்லும் படம். வசனம் ஏதுமில்லை.

Sweet Briyani (இயக்குநர் : ஜெயச்சந்திர ஹஸ்மி; 24 நிமிடங்கள்; தமிழ்; 2021)

பிரியாணி விநியோகம் செய்யும் ஒரு இளைஞனின் ஆத்மார்த்த அனுபவங்களைச் சொல்லும் எளிய கதை

The last Run (இயக்குநர் அனிர்பான் தத்தா; 36 நிமிடங்கள்; வங்காளப் படம் ஆங்கில சப் டைடில்களுடன்; 2019)

ஓரிடத்தில் இருந்து மறு ஊருக்கு கடிதங்களைச் சுமந்து செல்லும் தபால்காரர் பற்றிய படம். அந்த இடங்களில் இருக்கும் இதிகாச வீரர்களோடு வைத்து பார்க்கப்படும் நிலை. கால ஓட்டத்தில் இந்த வேலை தேவையற்றது ஆகிவிடுகிறது.

நண்பகல் 12.45 மணி : கலந்துரையாடல்

கருத்துரை:  எம். இராதாகிருஷ்ணன் 

பிற்பகல் 
1.15 மணி :  உணவு இடைவேளை 



 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை : 
இரண்டாவது அமர்வு

Waiting (இயக்குநர் ஆர். பி .அமுதன்; 7 நிமிடங்கள்; தமிழ்; 2022)

நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தினமும் திருச்சூரின் சாலை ஓரங்களில் வேலைக்காக காத்திருப்பதை சித்தரிக்கிறது.

 Zelam (இயக்குநர் : பிரதிம் வாக்மாரே; 19 நிமிடங்கள்;  மராத்தி ஆங்கில சப் டைடில்களுடன்; 2022)

கிராமப்புறத்தில் இருந்து நகருக்குச் சென்று கண்ணியமாக வாழ ஒரு இளைஞன் விரும்புகிறான். போதுமான பணத்தை சேகரித்து, காவலரிடம் மாட்டிக்கொண்டிருக்கும் தன் தந்தையையும் அவன் காப்பாற்ற வேண்டும். பலவிதமான தடைகள் வருகின்றன.

You Want Company (இயக்கம்: மேஹக் மத்தாரு; 19 நிமிடங்கள்; இந்தி & ஆங்கிலம் - ஆங்கில சப் டைடில்களுடன்; 2022)

ஒரு பெண் பிழைப்பதற்காக, அசாமிலிருந்து பெங்களூர் செல்கிறார்.

Shimga (இயக்குநர் சனத் கானு; 17 நிமிடங்கள்; மராத்தி ஆங்கில சப் டைடில்களுடன்; 2022)

வசதியானவர்களுக்கும், வசதியற்றவர்களுக்கும் இடையேயான அந்நியப்படுதலை காட்டுகிறது. ஒரு தரப்பாரை மற்றவர் புரிந்துகொள்வது ஒருபறம் இருக்கட்டும். அவர்களுக்கிடையேயான மொழி கூட வேறுபட்டுள்ளது.

Footprints ( இயக்குநர்: தத்தாகத்தா கோஷ்; 23 நிமிடங்கள்; வங்காளம் ஆங்கில சப் டைடில்களுடன், 2022)

குடிசையில் வாழும் பம்பா, குலைந்து போன ஒரு குடும்பத்தில் பணியாளராக இருக்கிறார். ஒருநாள் அவரது உலகம் உடைபடுகிறது. முதலாளிக்கும், வீட்டுப் பணியாளருக்கும் இடையே இருக்கும் தெளிவற்ற கோட்டை தாண்டி, ஒருநிலை எடுக்கிறாள்.

 Rat Trap (இயக்குநர்: ரூபேஷ் சாஹூ; 35 நிமிடங்கள்; இந்தி ஆங்கில சப் டைடில்களுடன்; 2022)

தனது உயிரைப் பணயம் வைத்து குறுகிய பாதைகளில் நிலக்கரி வெட்டியெடுப்பவர்களின் வாழ்வைப் பேசுகிறது. இதில் ஏற்படும் மரணங்கள் சில சமயங்களில் வெளி உலகுக்கு தெரிவதில்லை.இறந்த உடல்களைக் கூட கோரமுடிவதில்லை. அவர்களுக்காக அழ முடிவதில்லை. இது அவர்களின் அன்றாட வாழ்வு.

மாலை 4 மணி : கலந்துரையாடல் 

நாலை 4.30 மணி :  தேநீர் 

 


மாலை 4.45 மணி :  The Factory (இயக்குநர் : ராகுல்ராய்;  இந்தி ஆங்கில சப் டைடில்களுடன்; 2015)

மாருதி சுசூகி தொழிற்சாலையில் ஒரு மேலாளர் கொல்லப்பட்டதில் 147 தொழிலாளர்கள் மீது வழக்கு நடக்கிறது. 2500 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது பிணை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு வரும் தொழிலாளர்களை பார்க்க அவர்களது குடும்பத்தினர் காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு நீதி என்பது எட்டாக்கனி ! வழக்கை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் பற்றி பேசுகிறது இந்த ஆவணப்படம்)

மாலை 6.45 மணி  : 
கலந்துரையாடல் 
கருத்துரை : டி.எம்.மூர்த்தி ஏஐடியுசி 

No comments:

Post a Comment