Friday, May 12, 2023

தொழிலாளர் திரைப்படவிழா, மதுரை

தொழிலாளர் திரைப்படவிழா, மதுரை

14 மே, ஞாயிறு / காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை


வடிவமைப்பு : அமுதன் ஆர்.பி.


அனுமதி இலவசம்! அனைவரும் வருக!



திரையிடல் அட்டவணை 


காலை 11 மணி : தொடக்கவிழா


காலை 11.30 மணி 

குட்டி ஜப்பானின் குழந்தைகள்

இயக்கம் : சலம் பென்னுர்கர்; 60 நிமிடங்கள்; தமிழ்; 1990


சிவகாசி தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய ஆவணப்படம். பல்வேறு சர்வதேச விருதுகளை, பாராட்டுகளைப் பெற்ற படம்.


பிற்பகல் 12.30 மணி : கலந்துரையாடல்


பிற்பகல் 1 மணி : உணவு இடைவேளை


பிற்பகல் 2 மணி 


21 மணி நேரம்

இயக்கம் : சுனிதா சி.வி.; 28 நிமிடங்கள்; மலையாளம்; 2020


தினந்தோறும் தூத்துக்குடிக்கு 200 கிமி பயணம் செய்து மீன் வாங்கி வந்து, திருவனந்தபுரத்தின் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் ராஜம்மா எனும் பெண்ணைப் பற்றிய, அவர் ஒரு நாளில் வேலை செய்யும் 21 மணி நேரத்தை நம் கண் முன்னே கொண்டு வரும் ஆவணப்படம்.


கக்கண்டு (சிக்கிய முடிச்சு)

இயக்கம் : உஜ்வல் உட்கர்ஷ்; 20 நிமிடங்கள்; கன்னடம்; 2019


பெங்களூருவில் பனியன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இரண்டு பெண்மணிகளின் அன்றாட வாழ்க்கையை வெளிக்கொணர்கிறது இந்த ஆவணப்படம்.


நிலையாய் நிற்கும் பட்டாம்பூச்சி

இயக்கம்: சுமா ஜோசன்; 20 நிமிடங்கள்; இந்தி; 2011


மும்பையில் 30 வருடங்களுக்கு மேலாக ஓவியக்கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காகநிர்வாண மாதிரியாக வேலை செய்யும் 50 வயது பெண்மணி பற்றிய ஆவணப்படம்.


பிற்பகல் 3.15 மணி : கலந்துரையாடல்


3.30 மணி 


சிரம்ஜீவி (உழைத்துப் பிழைப்பவர்)

இயக்கம் : தருண் பார்தியா; 43 நிமிடங்கள்; இந்தி; 2020


தில்லியை ஒட்டிய, இந்தியாவிலேயே புலம்பெயர் தொழிலாளர்களில் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றான, காபசேஹ்ரா எனும் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கனவுகளையும் துயரங்களையும் பதிவு செய்கிறது இந்தப்படம்.


தங்கத்தைத் தேடி - கோலார் தங்கவயல் பற்றிய ஒரு பார்வை

இயக்கம் : பாசவ் பிரதர்; 34 நிமிடங்கள்; தமிழ், கன்னடம், ஆங்கிலம்; 2021


ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த கோலார் தங்கவயல் குடியிருப்பில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகுந்த லாபம் ஈட்டிய தொழிலை உருவாக்கிய மனிதர்களின் பல்வேறுவாழ்ந்த' அனுபவங்களையும், நினைக்கப்படும் வரலாறுகளையும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது.


4.55 : கலந்துரையாடல் 


5.15 தேநீர் இடைவேளை


5.30 மணி


மண்ணு : உறுதியின் மொட்டுகள்

இயக்கம் : ராம்தாஸ்; 113 நிமிடங்கள்; தமிழ், மலையாளம், ஆங்கிலம்; 2020


மூணாறு மலைப்பகுதியின் நீண்ட நிலப்பரப்பில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, பூர்வகுடிகளின் வெளியேற்றம், தோட்டத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல் மற்றும் உயிர்வாழ்வதற்காக அவர்கள் நடத்தும் போராட்டம் ஆகியவற்றை இந்தப்படம் தொகுக்கிறது


ஒருங்கிணைப்பு : Marupakkam, MUTA, ISSS, PUCL, STFI, MUFA, UCC & T Mu Ye Ka Sa (தமுஎகச)





No comments:

Post a Comment